என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விசேஷ பூஜை
நீங்கள் தேடியது "விசேஷ பூஜை"
வந்தவாசி டாஸ்மாக் கடையில் விற்பனை அமோகமாக நடைபெற மது பாட்டில்களுக்கு விசேஷ பூஜை செய்து வழிபாடு நடத்தினர். #Tasmac #TasmacShop
வந்தவாசி:
வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகே கோட்டை அகழி பகுதியில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு 3 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
புதிதாக திறக்கப்பட்ட இந்த கடைக்கு எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது. வியாபாரமும் அமோகமாக நடைபெற வேண்டும் என்று வேண்டி டாஸ்மாக் கடை ஊழியர்கள் 3 பேரும் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அவர்கள் படையலில் குவாட்டர் பாட்டில், தேங்காய், கற்பூரம், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து விசேஷ பூஜை செய்து வழிபட்டனர்.
அப்போது குவாட்டர் பிராந்தி பாட்டிலை சிறிதளவு பூமியில் ஊற்றிவிட்டு கடைக்கு வந்த குடிமகன் ஒருவருக்கு இலவசமாக வழங்கினர்.
வந்தவாசி நகரில் ஆரணி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அச்சரபாக்கம் சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறந்தபோது, பொதுமக்கள் கடையை திறக்க விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் கடை மூடப்பட்டது.
மதுக்கடையால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் புதிதாக திறந்த இந்த கடைக்கு எந்தவித பிரச்னையும் வரக்கூடாது. விற்பனை அமோகமாக இருக்க வேண்டும் என்று ஊழியர்கள் மதுபாட்டில்களுக்கு விஷேக பூஜை செய்தனர்.
டாஸ்மாக் ஊழியர்களின் இந்த செயலை குடிமகன்களும், ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். #Tasmac #TasmacShop

×

X